கரூர் டெக்ஸ் அதிபரிடம் பண மோசடி தொழில் வளர்ச்சி கழக டி.ஆர்.ஓ., கைது
கரூர்: கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில், மேல் பாகம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து, 55; டெக்ஸ் அதிபர். இவரிடம் ஐந்தாண்-டுகளுக்கு முன், கரூர் டி.ஆர்.ஓ., வாக பணியாற்றிய சூர்ய பிரகாஷ், 54, அசாம் மாநிலம் கவுகாத்தியில் துணி ஆர்டர் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதற்காக, 15 கோடி ரூபாய் வரை, சூர்ய பிரகாஷ் தரப்பினரிடம் கடந்த, 2021 முதல், 2023 ஆண்டுகளில் கொடுத்துள்ளார். ஆனால், ஆர்டரை பெற்று தரவில்லை. இதுகுறித்து, நல்ல சிவம் கடந்தாண்டு அக்., மாதம் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசார் சூர்ய பிரகாஷ் உள்பட, எட்டு பேர் மீது ஆறு பிரிவுகளில் கீழ், வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், நேற்று சென்னையில் தமிழ் நாடு தொழில் வளர்ச்சி கழகத்தில் டி.ஆர்.ஓ., வாக (நிலம் எடுப்பு) பணியாற்றி வந்த சூர்ய பிர காசை, கரூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்-தனர். பிறகு, நேற்றிரவு கரூர் ஜே.எம்.,-1 நீதிமன்றத்தில் ஆஜர்ப்-படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமார், சூர்ய பிரகாசை வரும், 11 வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து, சூர்ய பிரகாசை போலீசார் வேனில் அழைத்து சென்றனர்.