உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சித்தலவாய் ரயில் நிலையம் குறித்து கரூர் எம்.பி., நேரில் கள ஆய்வு பணி

சித்தலவாய் ரயில் நிலையம் குறித்து கரூர் எம்.பி., நேரில் கள ஆய்வு பணி

கிருஷ்ணராயபுரம், நவ. 9-சித்தலவாய் ரயில் நிலையம் செயல்பாடு குறித்து, கரூர் எம்.பி.,ஜோதிமணி நேரில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.கிருஷ்ணராயபுரம் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலை அருகில், சித்தலவாய் என்ற பெயரில் மிகவும் பழமையான ரயில் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து, பயணிகள் சென்று வரும் நிலையில், தற்போது ரயில் நிலையம் மூடப்படுவதாக தகவல் வந்ததன் அடிப்படையில், நேற்று கரூர் எம்.பி., ஜோதிமணி கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்த்தார்.பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சித்தலவாய் ரயில் நிலையம், 100 ஆண்டுகளாக பழமையானது. இங்கு முன்பதிவு மையம் செயல்படுகிறது. மாதம்தோறும், 1,300க்கும் மேற்பட்ட ரயில் பயணிகளுக்கு சேவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக, எட்டு லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. எனவே, இந்த ரயில் நிலையம் தொடர்ந்து செயல்படுவதற்காக ரயில்வே துறை அமைச்சரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் வரும். அதன்படி ரயில்நிலையம் மேம்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.முன்னதாக, ரயில் நிலையம் தொடர்ந்து செயல்படுவதற்காக, பொது மக்களிடம் கையெழுத்து பெறும் பணிகளையும் பார்வையிட்டார். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, வார்டு கவுன்சிலர் ராதிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை