உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் துவக்கம்

என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் துவக்கம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கு, என்.எஸ்.எஸ்., சிறப்பு திட்ட முகாம், ஏழு நாட்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் துவங்கிய முகாம், வரும் அக்., 2 வரை நடக்கிறது. முகாமில், குச்சிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கிருஷ்ணன், மாணவர்களின் பங்களிப்பு, சமுதாயத்தின் கடமைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் மரக்கன்று நடுதல், ஆலய உழவாரப்பணி, சாலை மேம்பாடு, பள்ளி வளாகத்தில் துாய்மை செய்தல், மழைநீர் சேகரிப்பு அமைத்தல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகிய களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், லட்சுமணம்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியர் ஜெகநாதன், பழையஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஜெகதீஸ்குமார் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி