மேலும் செய்திகள்
காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது
11-Aug-2024
கரூர், ஆக. 25-கரூரில், சாலையின் குறுக்கே சிறுபாலத்தில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது.கரூர் மாநகராட்சி அலுவலகம் பின்புறம், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலையின் குறுக்கே, சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுபாலம் அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், கான்கிரீட் அமைக்க போடப்பட்ட இரும்பு கம்பிகள், வெளியே தெரியும் நிலையில் இருந்தது. சிறுபாலத்தில் உடைப்பும் ஏற்பட்டது.மேலும், இணைப்பு சாலையில் போடப்பட்ட, தரமற்ற சிமென்ட் ஜல்லிக்கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடந்தது. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், சிறுபாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, சிறுபாலத்தில் இருந்த உடைப்பு சரி செய்யப்பட்டு, சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
11-Aug-2024