உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.ஏ.பி., பதில் டி.எஸ்.பி., உரம:் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

டி.ஏ.பி., பதில் டி.எஸ்.பி., உரம:் விவசாயிகளுக்கு வேண்டுகோள்

கரூர்,:கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கரூர் மாவட்டத்தில், சம்பா பருவ சாகுபடிக்காக யூரியா, 1,505 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 976 மெட்ரிக் டன், பொட்டாஷ், 836 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள், 2,581 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட், 219 மெட்ரிக் டன் என, மொத்தம், 6,117 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.டி.ஏ.பி., உரத்தில், 18 சதவீதம் தழைச்சத்தும், 46 சதவீதம் மணிச்சத்தும் உள்ளன. அதேபோல், டி.எஸ்.பி., உரத்திலும், 46 சதவீதம் மணிச்சத்து உள்ளது. இதன் மூலம் பயிர்களின் மணிச்சத்து தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக டி.எஸ்.பி., உரத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி