நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், இரண்டாம் கட்டமாக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, வல்லம், மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், சிவாயம் ஆகிய பகு-திகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். கடந்த மாதம் நெல் அறுவடை செய்யப்பட்டது. இந்நிலையில், கிணறு-களில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், விவசாயிகள் மீண்டும் இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தற்போது வயல்களில், டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு பணிகள் செய்யப்பட்டுள்ளது. நெல் சாகுபடி மூலம் விவசாயிக-ளுக்கு, இந்தாண்டு ஓரளவு வருமானம் கிடைத்துள்ளதால், மீண்டும் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.