உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் விற்பனை தொடக்கம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் விற்பனை தொடக்கம்

கரூர்;கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், விநாயகர் சிலைகள் விற்பனை நேற்று விறு விறுப்பாக நடந்தது.நாடு முழுவதும் வரும், 7ல் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனால், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பொது நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.மேலும், கரூர் மாவட்டத்தில், கரூர் அண்ணா வளைவு, பஞ்சமாதேவி, காளிப்பாளையம், லாலாப் பேட்டை உள்ளிட்ட இடங்களில், வீடுகளில் வைத்து வணங்க கூடிய, சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகள், ஆயிரக்கணக்கில் தயார் செய்யப்பட்டுள்ளன. நேற்று மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட, சிறிய அளவிலான விநாயகர் சிலைகள், கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் வியாபாரிகள், விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். குறைந்தப்பட்சமாக, 50 ரூபாய் முதல், அதிகப்பட்சமாக, 300 ரூபாய் வரை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், ஜவஹர் பஜார், ராமானுார், கோவை சாலை, உழவர் சந்தை சாலை, காந்தி கிராமம், தான்தோன்றி மலை, வெங்கமேடு, வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம், உள்ளிட்ட பகுதியில், வீடுகளில் வைத்து வணங்க கூடிய வகையில், ஒரு அடிக்கும் குறைவான விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை