உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டுகரூர், செப். 15-கரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து, 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்பவரது மனைவி கண்மணி, 32; இவர் கடந்த, 13ல் குடும்பத்துடன், கும்பகோணத்துக்கு கோவிலுக்கு சென்றுள்ளனர். பிறகு, கண்மணி குடும்பத்தினர் அன்றிரவு வீட்டுக்கு சென்ற போது, முன்பக்க வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த, 19 பவுன் தங்க நகைளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.கண்மணி அளித்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை