உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அசைவ உணவு கேட்டு சாலையில் அமர்ந்த வாலிபர்கள்: போலீசார் லபக்

அசைவ உணவு கேட்டு சாலையில் அமர்ந்த வாலிபர்கள்: போலீசார் லபக்

கரூர்: கரூர் தனியார் ஓட்டலில் அசைவ உணவு கேட்டு, சாலையில் அமர்ந்த, இரண்டு வாலி பர்களை, போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.கரூர் - கோவை சாலையில் தனியார் ஓட்டல் உள்ளது. அதில், நேற்று மதியம் அசைவ உணவு கேட்டு குடிபோதையில், 25 வயதுடைய வாலிபர்கள் தகராறு செய்தனர். இது குறித்து, ஓட் டல் ஊழியர்கள், கரூர் டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, டவுன் போலீசார் ஓட்டலுக்கு சென்று, வாலிபர்களை வெளியே அழைத்து வந்தனர். அப்போது, வாலிபர்கள் இரண்டு பேரும் சாலையில் அமர்ந்து கொண்டு சத்தம் போட்டனர். பின், போலீசார் இரண்டு வாலிபர்களையும் வேனில் ஏற்றி, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால், கரூர் - கோவை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ