உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 100 சதவீத ஓட்டுப்பதிவு முதியோரிடம் விழிப்புணர்வு

100 சதவீத ஓட்டுப்பதிவு முதியோரிடம் விழிப்புணர்வு

கரூர், கரூர் மாவட்டத்தில் உள்ள, 4 சட்ட சபை தொகுதிகளிலும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், துண்டு பிரசுரங்கள், பேரணி, கோலம், வாக்காளர் உறுதி மொழி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, -கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட புலியூர் அருகே, வெள்ளாளபட்டி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டவுன் பஞ்., செயல் அலுவலர் கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !