உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரைகளை பலப்படுத்தும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்

கரைகளை பலப்படுத்தும் பணியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம் :மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள, மழைநீர் சேமிப்பு குளத்தின் கரைகளை பலப்படுத்தும் பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து மேட்டுப்பட்டி கிராமத்தில் சிறிய மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. மழை காலங்களில் நீர் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. தற்போது மழை காலம் துவங்கவுள்ள நிலையில், மழை நீரை சேமிக்கும் வகையில், பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, குளம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது குளத்தின் கரைகள் மண்ணால் நிரவப்பட்டு சமன்படுத்தும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை