உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதல்வர் கோப்பை போட்டி 11 கால்பந்து அணிகள் பங்கேற்பு

முதல்வர் கோப்பை போட்டி 11 கால்பந்து அணிகள் பங்கேற்பு

கரூர்: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் ஆண்கள், பெண்கள் பிரிவில், 11 கால்பந்து அணிகள் பங்கேற்றன.கரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு விளையாட்டு மைதானங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 5 பிரிவுகளில் மாவட்ட அளவில், 27 வகையான போட்டிகளும், மண்டல அளவில், 53 வகையான போட்டிகள் நடக்கின்றன. இதில், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பொதுப்பிரிவு ஆண்கள், பெண்கள் கால்பந்து போட்டிகள் நேற்று நடந்தது. ஆண்கள் பிரிவில், 8 அணிகளும், பெண்கள் பிரிவில், 3 அணிகளும் என மொத்தம், 11 அணிகள் மோதின. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடக்கின்றன. மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கும் அணிகள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை