மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது
18-Aug-2025
அரவக்குறிச்சி க.பரமத்தியில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.க.பரமத்தி போலீசார் நெடுங்கூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் புகழூரை சேர்ந்த முருகானந்தம், 28, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சதீஷ்குமார், 26, ஆகிய இருவரும் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, ரூ.3,500 மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
18-Aug-2025