உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போலி ஆதார், பான் கார்டு தயாரித்த 2 பேர் கைது

போலி ஆதார், பான் கார்டு தயாரித்த 2 பேர் கைது

கரூர், கரூரில் போலி ஆதார், பான் கார்டு தயாரித்த புகாரில், நேபாளை சேர்ந்தவர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், போலி ஆதார் மற்றும் பான் கார்டு தயாரித்து வழங்குவதாக, கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த, 8 ல் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கரூரில் கார்த்திக், ஜெயக்குமார், சம்பத்குமார், நவீன், சீனிவா சன், கலைவாணி ஜெனிபர் ஆகிய, ஆறு பேரை பிடித்து, கரூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், விசாரணையின் போது ஆறு பேர் கொடுத்த தகவல்படி, போலியாக ஆதார் கார்டு, பான் கார்டு தயாரிக்க உடந்தையாக செயல்பட்டதாக, திருப்பூரில் வசித்து வந்த நேபாளம் நாட்டை சேர்ந்த, ராம் பகதுார், 35; மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, மிதுன் ேஷக், 29; ஆகிய இரண்டு பேரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ