மேலும் செய்திகள்
பேரூர் ஆதினம் சாந்தலிங்கர் நுாற்றாண்டு விழா
24-Feb-2025
கரூர்: 'கரூர் அருகே, ஆத்துார் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, இரண்டு லட்சம் பக்தர்கள் வருவர், என, எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் அருகில், ஆத்துார் வீரசோளிபாளையத்தில் உள்ள மஹா சோளியம்மன் கோவிலில், வரும் மார்ச் 10ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இது தொடர்பாக காடை மற்றும் விளையன் குல குடிப்பாட்டுக்காரர்கள் அறக்கட்டளை தலைவர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த புதிய கோவில், ஐந்து ஆண்டுகளாக நிர்மாணிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், முதலாவது மஹா கும்பாபிஷேகம் வரும், 10 காலை 5:30 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுரு அடிகளார், பழனி சாதுசாமி திருமடம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இக்கோவில் பெரும்பாலான பகுதி கற்களால் கட்டப்பட்டு, ஆகம விதிமுறைபடியும், சிற்ப சாஸ்திர முறைப்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.வரும், 7ல், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இருந்து, 108 புண்ணிய நதிகளின் தீர்த்தம் உள்பட ஆயிரக்கணக்கில் புனித தீர்த்தக்குடங்களுடன் பக்தர்களின் தீர்த்த ஊர்வலம் நடக்கிறது. அதில் குதிரை, காளை மாடுகள், வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம் கலை நிகழ்ச்சிகளுடன், 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வர். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவர் என்பதால், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான வாகன நிறுத்தம், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.முன்னதாக, கும்பாபிஷேக ஏற்பாடுகளை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார். பின் அடிப்படை வசதி, பாதுகாப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், போலீசார், விழா குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
24-Feb-2025