உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெண்ணைமலை கோவில் பிரச்னை 200 பேர் கைது: 4 கடைகளுக்கு சீல்

வெண்ணைமலை கோவில் பிரச்னை 200 பேர் கைது: 4 கடைகளுக்கு சீல்

கரூர் : கரூர், வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான, 4 கடைகள் சீல் வைக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட, 200 பேர் கைது செய்யப்பட்டனர்.கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடங்களை மீட்க கோரி, உயர்நீதி-மன்றம் மதுரை கிளையில், சேலம் திருத்தொண்டர் சபை நிறு-வனர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு நீதி-மன்றம் உத்தரவிட்டது. அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக, மீட்கப்படாமல் இருந்தது.இதையடுத்து, கோவில் நிலங்களை மீட்க முயற்சி செய்யாத, அதி-காரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். பின், நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி, இடங்களை மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் வெண்ணைமலை பேங்க் காலனியில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்க, நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் வந்தனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு, கடும் வெப்பம் வீசியதன் காரணமாக பெண்கள் உள்பட, 4 பேர் மயக்கமடைந்தனர். அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக முடிவு ஏற்படவில்லை என்பதால், போராட்டத்தில் ஈடுபட்ட, 150 பெண்கள் உள்பட, 200 பேரை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள, 4 கடைளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான மீட்கப்பட்ட இடங்கள் மற் றும் சீல் வைக்கப்பட்ட கடைகளை, திருத்தொண்டர் சபை நிறு-வனர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை