உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே இளைஞர் கொலை 3 பேருக்கு இரட்டை ஆயுள்

கரூர் அருகே இளைஞர் கொலை 3 பேருக்கு இரட்டை ஆயுள்

கரூர்,கரூர் அருகே நடந்த இளைஞர் கொலை வழக்கில், அண்ணன், தம்பி உள்பட மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை மேட்டுமகாதான புரம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் அருண்குமார், 29. இவருக்கும், லந்தன்கோட்டை பகுதியை சேர்ந்த அண்ணாவி மகன்கள் பெரியசாமி, 29; வினோத், 27, ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த, 2021 அக்., 29ல் அருண்குமார், கீழசிந்தலவாடி பகுதியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு சென்ற பெரியசாமி, வினோத், இவர்களது நண்பர் கீழசிந்தலவாடி பகுதியை சேர்ந்த ஆனந்தன், 26, ஆகியோர், அருண்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். லாலாப்பேட்டை போலீசார், மூன்று பேரையும் கைது செய்து, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் பெரியசாமி, வினோத், ஆனந்தன் ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பளித்தார். இதையடுத்து மூன்று பேரையும், போலீசார் பாதுகாப்புடன், திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ