உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விபத்துக்குள்ளான காரில் 300 கிலோ குட்கா பறிமுதல்

விபத்துக்குள்ளான காரில் 300 கிலோ குட்கா பறிமுதல்

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, விபத்தில் சிக்கிய காரில் புகையிலை, குட்கா பொருட்கள் கிடந்தன. கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, நாணப்பரப்பு பகுதியில், நேற்று முன்தினம் அதிவேகமாக சென்ற கார், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. காரை ஓட்டி வந்த டிரைவர், சிறு காயத்துடன் தப்பி ஓடி விட்டார். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்தில், கார் கவிழ்ந்து கிடப்பது குறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காரை சோதனை செய்தனர். அப்போது காரில், 300 கிலோ எடை கொண்ட, புகையிலை, குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த டிரைவர் குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை