மேலும் செய்திகள்
மது பதுக்கியவர் கைது
03-Oct-2026
கரூர்; கரூர் அருகே சட்டவிரோதமாக வைக்கப்பட்டு இருந்த, 332 சமையல் காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகில் புது கஞ்சமனுாரில், மஞ்சுநாதன் என்பருக்கு சொந்த-மான தறி கூடாரம் உள்ளது. அங்கு, காஸ் சிலிண்டர் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. பறக்கும் படை தாசில்தார் செந்தில் தலை-மையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, சட்ட-விரோதமாக வைக்கப்பட்டிருந்த, 332 தனியார் சமையல் காஸ் (கோ காஸ்) சிலிண்டர்களை பறி-முதல் செய்தனர். இங்கு, தனியார் காஸ் உரி-மையாளர், கரூர் அருகில் புகழூர் சேர்ந்த ஜெயபி-ரகாஷ், 48, எவ்வித உரிய அனுமதியுமின்றி சட்-டவிரோதமாக அதிக அளவில் சிலிண்டர்களை வைத்திருந்தது தெரியவந்தது.குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்-டுள்ளது.
03-Oct-2026