உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் 4 பேர் மாயம்

குளித்தலையில் 4 பேர் மாயம்

குளித்தலை:குளித்தலை அடுத்த ராஜேந்திரம் மேலகுடித்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி, 39; ஜவுளி கடையில் டிரைவர். இவரது மனைவி அபிராமி, 27, மகள் வர்ஷிகா, 10; நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, தண்ணீர் பள்ளியில் உள்ள அரசுப்பள்ளியில் மகளை கொண்டு சென்றுவிடுவதாக அபிராமி கூறிவிட்டு சென்றார். ஆனால், இருவரும் வீட்டுக்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும், அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. குளித்தலை போலீசார் தாய், மகள் இருவரையும் தேடி வருகின்றனர்.கொத்தனார் மாயம்குளித்தலை அடுத்த புரசம்பட்டி காலனியை சேர்ந்த மாயவன் மகன் மணிகண்டன், 22; கொத்தனார். இவர், மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, வீட்டில் இருந்த கொத்தனார் மணிகண்டனை காணவில்லை. அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், நங்கவரம் போலீசார் தேடி வருகின்றனர்.சிறுமி மாயம்குளித்தலை அடுத்த தரகம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் உமாசங்கர், 43; போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மகள் ஜனனி, 16, ரெட்டியப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு, வீட்டில் இருந்தவரை காணவில்லை. இதுகுறித்து புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை