52.69 கி.மீ., துாரம் கிராம சாலை ஆய்வு பணியில் மாவட்ட கலெக்டர்
கரூர: கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் பாகநத்தம் மற்றும் மூக்கணாங்குறிச்சி பஞ்., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்ட பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், புதிய குளம் அமைக்கும் பணிகளை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும், 41 சாலைகள், 52.69 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கும் பணிகள் நடக்கிறது. கிராமப்புறங்களில் மழை காலங்களில் நீரை சேமிப்பதற்கும், நிலத்தடி நீரை செரி-வூட்டுவதற்கும், விவசாயிகளின் பயன்பாட்டிற்கும், கால்நடை-களின் குடிநீர் ஆதாரத்திற்கும் புதிய குளங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்திலுள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும், 2024--25ம் ஆண்டில், 38 புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீரீலேகா தமிழ்ச்செல்வன் உடனிருந்தார்.