உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.55.98 லட்சம் மதிப்புள்ளவேளாண் பொருட்கள் ஏலம்

ரூ.55.98 லட்சம் மதிப்புள்ளவேளாண் பொருட்கள் ஏலம்

கரூர்:சாலைபுதுார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 55.98 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. 6,134 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 38.05 ரூபாய், அதிகபட்சமாக, 60.99 ரூபாய், சராசரியாக, 54.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,857 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 1 லட்சத்து, 1,259 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 170 ரூபாய், அதிகபட்சமாக, 176.99 ரூபாய், சராசரியாக, 175.79 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 116.99, அதிகபட்சமாக, 175.69, சராசரியாக, 158.88 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 11,123 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 17 லட்சத்து, 89 ஆயிரத்து 454 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 130.19, அதிகபட்சமாக, 192.72, சராசரியாக, 182.69 ரூபாய், சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 123.99, அதிகபட்சமாக, 145.39, சராசரியாக, 135.09, வெள்ளை ரகம் ஒரு கிலோ அதிகபட்சமாக, 119.02, சராசரியாக, 116.16 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 23,625 கிலோ எடையுள்ள எள், 37 லட்சத்து 8,274 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 55 லட்சத்து, 98 ஆயிரத்து, 987 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ