உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  7 பேர் கொலை வரும் 15ல் தண்டனை

 7 பேர் கொலை வரும் 15ல் தண்டனை

கரூர்: மதுரை அருகே நடந்த, ஏழு பேர் கொலை வழக்கில், குற்றவாளிகள், ஒன்பது பேருக்கு தண்டனை விபரங்கள் வரும் 15ல் அறிவிக்கப்படும் என, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், புளியங்குளத்தை சேர்ந்த, 20 பேர், 2012ல் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடந்த தேவர் குரு பூஜையில் பங்கேற்று விட்டு, 'டாடா சுமோ' வேனில் சொந்த ஊருக்கு திரும்பிய போது, மதுரை ரிங் ரோடு பகுதியில், பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், ஏழு பேர் கொல்லப் பட்டனர்; 13 பேர் காயமடைந்தனர். அவனியாபுரம் போலீசார், 11 பேரை கைது செய்தனர். கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், தொடர்புடைய இருவர் படுகொலை செய்யப்பட்டனர். மீதமுள்ள, ஒன்பது பேரும், குற்றவாளிகள் என, மார்ச், 23ல் அறிவிக்கப்பட்டனர். நீதிபதி இளவழகன், ''வரும் 15ல் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும்,'' என, அறிவித்தார். தண்டனைக்கான தேதி, இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை