பட்டாசு வெடித்ததில் தகராறு இரு தரப்பினர் மீது வழக்கு
குளித்தலை: குளித்தலை அடுத்த, ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்-பையா, 54, விவசாய கூலி தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த-வர்கள் பாலசுப்பிரமணின், அர்ஜுனன். இருவரும் கடந்த, 31 மாலை, 6:30 மணியளவில் சுப்பையா, அவரது அண்ணனுக்கு சொந்தமான மாடுகளின் மீது பட்டாசு கொளுத்தி போட்டனர்.மாடு மிரண்டு ஓடியதால், ஏன் இப்படி செய்கிறீர்கள் என சுப்-பையா கேட்டார். இருவரும் தகாத வார்த்தை பேசி, அரிவாளால் வெட்டி காயம் ஏற்படுத்தினர். சுப்பையனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து சுப்பையன் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் பாலசுப்பிரமணி, அர்ஜுனன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதே வழக்கில் பாலசுப்பிரமணி, 33, கொடுத்த புகார்படி ராஜேந்திரன், சுப்பையன், நவநீதகிருஷ்ணன், ஈஸ்வரி, திவ்யா, ஜீவா ஆகியோர் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகராறில் அர்ஜுனனுக்கு, 56, காயம் ஏற்பட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.