முட்புதருக்குள் கழிப்பிடம்; பயன்படுத்த முடியாமல் தவிப்பு
கரூர்: கரூர் அருகே, முட்புதருக்குள் உள்ள கழிப்பி-டத்தை திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், கோம்புபாளையம் பஞ்சாயத்து, நொய்யல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பகுதியில், ஏராளமான வீடுகள் உள்ளன. தொடக்-கப்பள்ளி அருகே டி.என்.பி.எல்., (காகித ஆலை) சார்பில் பொதுமக்கள் வசதிக்காக, பல ஆண்டுக-ளுக்கு முன்பு கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது, பராமரிப்பு இல்லாமல் உள்ளது.மேலும், கழிப்பிடத்தை சுற்றி பொதுமக்கள் செல்ல முடியாத வகையில், முட்புதர்கள் முளைத்-துள்ளன. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பலர், நொய்யல் ஆற்றின் கரையோர பகுதிகளை, திறந்த வெளி பகுதி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், நொய்யல் தொடக்கப்பள்ளி பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிக-ரித்துள்ளது. எனவே, நொய்யல் அரசு தொடக்கப்-பள்ளி அருகே உள்ள, கழிப்பிடத்தை சீரமைக்க, கோம்பு பாளையம் கிராம பஞ்., நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.