உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிராவல் மண் வெட்டி கடத்தல் பெயரளவுக்கு நடந்த ஆய்வு

கிராவல் மண் வெட்டி கடத்தல் பெயரளவுக்கு நடந்த ஆய்வு

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், கொல்லிமலை அடிவார-மான போடிநாய்க்கன்பட்டி பஞ்., மண்கரடு, கெஜ-கோம்பையில், தினமும், 500க்கும் மேற்பட்ட லாரிகளில் கிராவல் மண் வெட்டி கடத்துவதா-கவும்; இதனால், கொல்லிமலையில் அதிக மழைப்பொழிவின்போது, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, நமது நாளிதழில், கடந்த, 12ல் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, அலங்-காநத்தம் வருவாய் ஆய்வாளர் ஜெயராமன், கெஜகோம்பை வி.ஏ.ஓ., பழனி உள்ளிட்ட அதிகா-ரிகள், மண் ‍வெட்டிய இடத்தில் ஆய்வு மேற்-கொண்டனர். அப்போது, அவர்கள் மண் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யாமல், பெய-ரளவிற்கு ஓரிடத்தில் ஆய்வு செய்துவிட்டு கிளம்-பினர். மேலும், அதிகாரிகள் சென்றபோது, அவர்-களின் எதிரிலேயே ஏராளமான லாரிகளில் மண் ஏற்றிக்கொண்டு சென்றதால், இதைப்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி