மேலும் செய்திகள்
இன்று இனிதாக (18.10.2024) புதுடில்லி
18-Oct-2024
இன்று இனிதாக - திருப்பூர்
04-Oct-2024
தீபாவளிக்கு நிர்ணயம் செய்த நேரத்தில்பட்டாசு வெடிக்க வேண்டுகோள்கரூர், அக். 18-'தீபாவளி முன்னிட்டு ஒலி எழுப்பும் பட்டாசுகளை, நிர்ணயத்த நேரத்தில் வெடிக்க வேண்டும்' என, கலெக்டர் தங்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:தீபாவளி திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகையன்று காலை, 6:00 முதல் காலை, 7:00 மணி வரையும், இரவு, 7:00 முதல் இரவு, 8:00 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து பள்ளி, கல்லுாரி, தேசிய பசுமை படை, பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொது மக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதை கருத்தில் கொண்டு, அரசு விதிகளை கடைப்பிடித்து பட்டாசு வெடிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
18-Oct-2024
04-Oct-2024