உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் சிறு கைத்தறி பூங்கா; அமைச்சர் தகவல்

கரூரில் சிறு கைத்தறி பூங்கா; அமைச்சர் தகவல்

கரூர: ''கரூர் வேலுசாமிபுரத்தில், 100 தறிகள் கொண்ட சிறிய அளவி-லான கைத்தறி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் காந்தி தெரிவித்தார்.கரூர் மாவட்டம், கோடாங்கிப்பட்டி மற்றும் காக்காவாடியில் தனியார் ஜவுளி பூங்காக்களில் கட்டுமானம் மற்றும் புனரமைப்பு பணிகளை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தறி துணிநுால் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின், கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி-யாளர் சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், அமைச்சர் காந்தி பேசியதாவது:நெசவாளர்களின் தொழிலை மேம்படுத்துவதற்காக, 10 சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் தலா, 2 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. கரூர் சர-கத்தில், 43 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்-பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களை கொண்டு உள்ளூர் உற்-பத்தி ரகங்களான பெட்ஷீட், தலையணை உறை, துண்டு மற்றும் ஏற்றுமதி ரகங்களான எம்ப்ராய்டரி குஷன் கவர், பீச் மேட், குவில்ட், பாய் மெத்தை, பை ஆகிய ரகங்கள் உற்பத்தி செய்யப்ப-டுகின்றன.இவற்றில் கோ--ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு ஆண்டுதோறும், 43 லட்சம் ரூபாய் வரையில் பல்வேறு ரகங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் அமைந்துள்ள, எம்.எம்.76 கரூர் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், 6,825 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள தொழிற்-கூடத்தில், 100 தறிகள் கொண்ட சிறிய அளவிலான கைத்தறி-பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நிறுவப்-படும், 40 கைத்தறிகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 60 நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பும், நிலையான வருமானமும் வழங்குவது உறுதி செய்யப்படும். இரண்டாம் கட்-டமாக மீதி, 60 கைத்தறி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்-வாறு பேசினார்.நிகழ்ச்சியில், அரசு செயலர் (கைத்தறி, கைத்திறன், துணி நுால் மற்றும் கதர் துறை) அமுதவல்லி, ஜவுளித்துறை இயக்குனர் லலிதா, கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, உதவி இயக்குநர் (கைத்தறி) சர-வணன், துணை இயக்குநர் (டெக்டைல்ஸ்) தமிழ்செல்வி, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை