உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில் மோதியதில் வாலிபர் பலி

ரயில் மோதியதில் வாலிபர் பலி

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, ரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார். ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இப்ப-குதியில் ரயில் பாதைக்கு அருகே, நேற்று காலை தலை நசுங்கிய நிலையில் வாலிபர் சடலம் கிடந்-தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்-தனர்.ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசா-ரணை நடத்தினர். ரயிலில் அடிபட்டு இறந்தவர் குறித்து விபரம் ஏதும் தெரியவில்லை. இறந்தவருக்கு, 40 வயதிருக்கும். வலது மார்பில் மீனா என்றும், இடது மார்பில் திவ்யா, பவித்ரா, சத்தியா என்றும் பச்சை குத்தப்பட்டிருந்தது. அக்னி, 550 என்று பிரின்ட் செய்யப்பட்ட டி-சர்ட், நீல நிறத்தில் லுங்கி அணிந்திருந்தார். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 9498101963, 9498127373 என்ற செல்போனுக்கு தொடர்பு கொள்ளலாம் என, சேலம் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை