உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் அபிஷேகம்

ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் அபிஷேகம்

கரூர், ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், கரும்பு சாறு, விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின், சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* கரூர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், முருகனுக்கு சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் முருகன் புறப்பாடு நடந்தது.* புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை