உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழைநீர் சேமிப்பு குளத்தை துார்வார நடவடிக்கை தேவை

மழைநீர் சேமிப்பு குளத்தை துார்வார நடவடிக்கை தேவை

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த போத்துரவுத்தன்பட்டி பஞ்சாயத்து, வடுகப்பட்டி பகுதியில் மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. 'மழை காலங்களில் இந்த குளித்தில், மழை நீர் சேமிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது. இதன் மூலம் நிலக்கடலை, நெல், சோளம், எள், சூரியகாந்தி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது மழை நீர் சேமிப்பு குளத்தில், அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் மழை காலங்களில் மழை நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நீர் மட்டம் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, மழை நீர் சேமிப்பு குளத்தில் வளர்ந்து வரும் முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை