உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி ஆதித்தமிழர் பேரவை மனு

மயானத்திற்கு அடிப்படை வசதி கோரி ஆதித்தமிழர் பேரவை மனு

கரூர்: மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என, ஆதித்தமிழர் பேரவை செயலாளர் பாரதி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள செம்பியநத்தம் பஞ்-சாயத்துக்குட்பட்ட சின்னமுத்தம்பாடியில், மயானம் மிகவும் தொலைதுாரம் உள்ளது. கரடு முரடான வழியில் செல்ல வேண்டி உள்ளது. இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்வதற்கு, நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வருகிறோம். மழைக்காலங்களில் செல்-லவே முடியாத நிலை ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி, மயானத்தில் அடிப்படை வசதி, முறையான பாதை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை