உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 20ல் வேளாண் இயந்திர மேளா

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 20ல் வேளாண் இயந்திர மேளா

கரூர், வரும், 20ல் வேளாண் இயந்திர மேளா நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில் வரும் 20 காலை, 10:00 மணியளவில் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மேளா நடக்கிறது. இதில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், திறன்மிகு செயல்பட மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கின்றனர். பல்வகை கதிரடிக்கும் இயந்திரம், தென்னை மட்டை துாளாக்கும் கருவி மற்றும் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது போன்ற வேளாண் கருவிகளை இயக்கி காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி விளக்கம் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை