உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.43.90 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்

ரூ.43.90 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்

கரூர் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை சேர்த்து, 43 லட்சத்து 90 ஆயிரத்து, 850 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. 12,721 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 51.59 ரூபாய், அதிகபட்சமாக, 66.99, சராசரியாக, 64.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,806 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 2 லட்சத்து, 20 ஆயிரத்து, 875 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 198.99, அதிகபட்சமாக, 210.60, சராசரியாக, 207.09, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 133.49, அதிகபட்சமாக, 207.16, சராசரியாக, 198.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 9,256 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 17 லட்சத்து, 97 ஆயிரத்து, 925 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.கருப்பு ரகம் எள் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 90.11, அதிகபட்சமாக, 128.29, சராசரியாக, 122.99, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 95.99, அதிகபட்சமாக, 133.29, சராசரியாக, 124.99, வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 125.99, அதிகபட்சமாக, 125.99, சராசரியாக, 125.99 ரூபாய்க்கு ஏலம் போனது. 13,468 கிலோ எடையுள்ள எள், 15 லட்சத்து 73 ஆயிரத்து 7 ரூபாய்க்கு விற்பனையானது.நிலக்கடலை ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 64.40, அதிகபட்சமாக, 71.66, சராசரியாக, 70.40 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 11,629 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 7 லட்சத்து 99 ஆயிரத்து 43 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை சேர்த்து, 43 லட்சத்து, 90 ஆயிரத்து, 850 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை