பா.ஜ.,வில் இணைந்த மாற்று கட்சி இளைஞர்கள்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மேற்கு மண்டலத்தில், பல்வேறு கட்சியை சேர்ந்த இளைஞர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். இதில், மாற்று கட்சியில் இருந்து வந்த, 100 இளைஞர்களுக்கு, பா.ஜ., துண்டு அணிவித்து வரவேற்றார். அப்போது அவர் பேசுகையில், ''பா.ஜ., வலுவான கட்சியாக உருவெடுத்து வருவதால், இளைஞர்கள் தாமாக முன்வந்து கட்சியில் இணைந்து வருகின்றனர்,'' என பேசினார். மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் பாக்கியரகுபதி, மணவாசி ராஜதுரை, கிருஷ்ணராயபுரம் மேற்கு மண்டல தலைவர் கோபி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.