உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நான் ஜாமின் அமைச்சரா? செந்தில் பாலாஜி காட்டம்

நான் ஜாமின் அமைச்சரா? செந்தில் பாலாஜி காட்டம்

கரூர் : மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில், மக்களிடம் நேற்று மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழக மின்வாரியம் தொடர்பாக, தொழிலதிபர் அதானியை, முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளோம். அதை படித்த பிறகும் ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தெரிந்தவர்களிடம் கேட்டு புரிந்துகொள்ள பக்குவமும், அறிவுத் திறனும் இல்லை. அவரின் அறிக்கையில், 'ஜாமின் அமைச்சர்' என சொல்லி இருக்கிறார். பா.ஜ.,வில் எத்தனை பேர் ஜாமினில் வெளி வந்திருக்கின்றனர்.எத்தனை பேர் அமைச்சராக இருக்கின்றனர். இந்தத் தகவலையெல்லாம் அந்த நபர் வெளியிட வேண்டும். மத்திய அரசு தேர்வு செய்த 11 பேர் வெளிநாட்டுக்கு சென்று படித்துள்ளனர். அதில், ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் உள்ளனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி மட்டும் திரும்ப திரும்ப செய்தி வெளியிட்டு கொண்டிருக்கின்றனர். அவர் லண்டன் சென்று படித்ததாலேயே சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விழைகின்றனர். ஏற்கனவே சேலத்தில் கலெக்டராக இருந்த ரோஹிணியும், லண்டன் சென்று 11 பேரில் ஒருவராக படித்திருக்கிறார். அவர் பற்றிய செய்தியை எங்கும் படிக்க முடியவில்லை. இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

எவர்கிங்
டிச 09, 2024 20:08

இல்லீங்கோ ஜமீன்தார் ஆமை சேர்


பேசும் தமிழன்
டிச 09, 2024 08:33

அண்ணாமலை அவர்களின் வார்த்தை ஜாலம்..... வேற லெவல்


தமீல் டுமீல்
டிச 09, 2024 07:59

எவ்ளோ மூத்தத் தலைவர்கள் கட்சியின் முன்னணி உறுப்பினர் இருந்தாலும் சின்னவரை து மு ஆக்கியது, எல்லாரும் அவரை சுற்றியே தற்புகழ்ச்சி பாடுவது போலவே. கதறல் அருமை


புதிய வீடியோ