உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தந்தை, மகனை கத்தியால் குத்தி பணம் பறித்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கைது

தந்தை, மகனை கத்தியால் குத்தி பணம் பறித்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கைது

கரூர், கரூரில் தந்தை, மகனை கத்தியால் குத்தி பணம், தங்க நகை பறித்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் அருள், 41, கூலி தொழிலாளி. இவர் கடந்த, 24ல் மகன் தரணிஷ், 15, என்பவருடன் ராமானுஜம் நகர் பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆம்புலன்ஸ் டிரைவர்களான அரவக்குறிச்சியை சேர்ந்த முரளி, 30, கிருஷ்ணராபுரத்தை சேர்ந்த மூர்த்தி, 26, ஆகியோர் அருள், அவரது மகன் தரணிஷ் ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு, ஒரு பவுன் தங்க மோதிரம், 5,000 ரூபாய் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பினர்.இது குறித்து, அருள் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி முரளி, மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். கத்தி குத்தில் காயமடைந்த அருள், அவரது மகன் தரணிஷ் ஆகியோர் கரூரில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ