மேலும் செய்திகள்
வீரமாத்தியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
28-Apr-2025
கரூர், புன்னம் சத்திரம், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வைகாசி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு அலங்காரம் நடந்தது.பிரசித்தி பெற்ற, கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில், வைகாசி மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. அதை தொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அலங்கார பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், தலையூர் மாரியம்மன் கோவில், புகழூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சி அம்மன் கோவில், திருகாடுதுறை மாரியம் மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம் மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில்களிலும், வைகாசி மாத அமாவா சையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.* க.பரமத்தி ஒன்றியம், குப்பம் அருகில் உப்புபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.* குப்பம், பெரியகாண்டியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், குன்னுடையான், பொன்னர் சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் தெய்வங்களுக்கும் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.* அத்திப்பாளையம் பெரியபொன்னியம்மன், சின்னபொன்னாச்சியம்மன், குப்பம் பொன்காளியம்மன், க.பரமத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.* கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் ஆகிய பொருட்கள் கொண்டு அபிேஷகம் நடந்தது. மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.* மாயனுார், செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.
28-Apr-2025