உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடிப்பூர திருவிழா திருத்தேரில் அம்மன்

ஆடிப்பூர திருவிழா திருத்தேரில் அம்மன்

குளித்தலை, குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி கடந்த, 19ல் விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, அங்குராப்பணம் பூஜைகளுடன் விழா தொடங்கியது. தினந்தோறும் சுவாமி திருவீதி உலா வந்தது. நேற்று காலை, 9:00 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தேரில் முற்றிலா முலையம்மை பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.பக்தர்கள் தேங்காய் பழம் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை