உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை அருகே அங்கன்வாடி பணியாளர் விபரீத முடிவு

குளித்தலை அருகே அங்கன்வாடி பணியாளர் விபரீத முடிவு

குளித்தலை, குளித்தலை அடுத்த, வாத்திக்கவுண்டனுாரை சேர்ந்த சங்கபிள்ளை மனைவி ராஜேஸ்வரி, 38. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், தாசில்நாயக்கனுார் அங்கன்வாடி பள்ளியில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் லாரி வாங்கினார். அதை சரிவர இயக்கப்படாததால், போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமலும், அடமானம் வைத்த நகைகளை திரும்ப பெற முடியாமலும் மன வேதனையில் இருந்து வந்தார். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதால், மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம், கணவர் வெளியே சென்ற பிறகு வீட்டின் அறையை உள் பக்கமாக தாழிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குளித்தலை போலீசார் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சங்கப்பிள்ளை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ