உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி ஊழியர் சங்க 2வது மாநாடு

அங்கன்வாடி ஊழியர் சங்க 2வது மாநாடு

குளித்தலை: குளித்தலை அருகே, புதுப்பாளையம் சமுதாய கூடத்தில், தமிழ்-நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க, இரண்டா-வது மாநாடு நடந்தது. சங்க தலைவர் சாந்தி தலைமை வைத்தார். செயலாளர் வாசுகி, பொருளாளர் லட்சுமி, துணைத்தலைவர் ராதிகா ஆகியோர் முன்னிலை வைத்தனர். துணை செயலாளர் மஞ்சுளா வரவேற்றார். சங்க நிர்வாகி அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரம-ணியன் துவக்க உரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர்கள் பத்-மாவதி, கலா, சாந்தி ஆகியோர், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர்.இந்த மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்-களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம், 26,000 ரூபாய் உதவியாளர்களுக்கு, 21,000 ரூபாய் நிர்-ணயிக்க வேண்டும். பணிக்கொடையாக, 10 லட்சம் ரூபாய், உத-வியாளர்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன், 9000 வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ