கரூரில் நாளை பட்ஜெட் விளக்ககூட்டம்; அண்ணாமலை பங்கேற்பு
கரூரில் நாளை பட்ஜெட் விளக்ககூட்டம்; அண்ணாமலை பங்கேற்புகரூர்:''கரூரில் நாளை நடக்கும், மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்,'' என, மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கூறினார்.கரூரில், பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் செங்குந்தபுரம், 80 அடி சாலையில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நாளை (19ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வித்துறை, உயர்நிலை கல்வி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அரசியல் தலையீட்டால் சீர்கெட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் சார்பில், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.