மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாட்டம்
19-Mar-2025
கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியம், என்.புதுார் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா, தலைமையாசிரியை தமிழரசி தலைமையில் நேற்று நடந்தது.அதில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பிறகு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநில செயலாளர் ஜெயராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் பரிசு வழங்கினார். விழாவில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இந்துமதி, பஞ்., முன்னாள் தலைவர் ஜோதிமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
19-Mar-2025