உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்

லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்

கரூர், டிச. 12-கரூர் மாவட்டம், லாலாபேட்டை கருப்பண்ண சுவாமி கோவிலில், அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் சார்பில், லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். சீட்டா நிறுவனர் பாபு, 'லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பற்றியும், அரசின் திட்டங்களை பெறுவது குறித்தும்' பேசினார். மேலும் சந்தேக கேள்விகளுக்கு பதிலளித்தார். வரும் 2031ல், கரூர் மாவட்டத்தை லஞ்சம் இல்லாத மாவட்ட பகுதியாக உருவாக்க உறுதி மொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து, 2,500 வீட்டிற்கு ஒரு பயிற்சியாளர் வீதம், 150 பயிற்சியாளர்களை தேர்வு செய்து விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு செயலாளர் சந்திரசேகர், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு நிர்வாகிகள் குப்புசாமி, வேலுச்சாமி, சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ