உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அஞ்சல் கோட்டத்தில் எப்.ஓ., திறக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர் அஞ்சல் கோட்டத்தில் எப்.ஓ., திறக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர் 'கரூர் அஞ்சல் கோட்டத்தில், எப்.ஓ., திறக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளtர்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் அஞ்சல் கோட்டத்தில் எப்.ஓ., (பிரான்சிஸ் அவுட்லெட்) திறப்பதற்கு தனி நபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த எப்.ஓ., விற்பனை நிலையங்களில் ஸ்டாம்பு விற்பனை, பதிவு தபால்கள், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் மற்றும் இதர சேவைகளை அஞ்சல் துறை சார்பில் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.அத்தகைய எப்.ஓ., க்கள் துணை அஞ்சல் அலுவலகம், தலைமை அஞ்சல் அலுவலகம் இல்லாத இடங்களில் அல்லது தொலைவில் உள்ள இடங்களில் அமைக்க அனுமதி வழ ங்கப்படும். இதற்கு, 18 வயது மேற்பட்ட வராக இருக்க வேண்டும். அதிகப்பட்ச வயது வரம்பில்லை. தேவையான கட்டட வசதியுடன், இந்திய குடிமகனாக, இந்திய குடியுரிமை பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்.விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, பான்கார்டு, கணினி பயிற்சி சான்றிதழ் ஆகியவற்றுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை கரூர் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வரும், 25க்குள் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை