மத்திய அரசின் பத்ம விருது 30க்குள் விண்ணப்பிக்கலாம்
கரூர், மத்திய அரசின் பத்ம விருதுகள் வரும், 30க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு சார்பில் கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் (பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ) வழங்கப்படுகிறது.இந்த விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. https://awards.gov.inமற்றும் https://padmaawards.gov.inஎன்ற இணையதள முகவரியில் வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை, 7401703493 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.