உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் கேரம், சிலம்பத்தில் அசத்தல்

அரவக்குறிச்சி பள்ளி மாணவர்கள் கேரம், சிலம்பத்தில் அசத்தல்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கேரம், சிலம்பத்தில் மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படடனர்.கரூர் மாவட்டத்தில், பள்ளிகளுக்கு இடையேயான குறுவள மைய போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. கரூர் குளத்துபாளையத்தில் நடந்த கேரம் போட்டியில், அரவக்குறிச்சி அரசு பள்ளி மாணவி அப்ரின் ஷிபா, ஒற்றையர் பிரிவில் அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று, இறுதி சுற்றில் ஸ்டார் பள்ளியுடன் மோதி, வெற்றி பெற்று முதலிடம் பெற்றார். மேலும், சின்னதாராபுரத்தில் நடந்த சிலம்பம் போட்டியில், இரு கம்பு சுற்றுதலில் எட்டாம் வகுப்பு மாணவர் ஹரிஷ் இரண்டாம் இடம் பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றார்.வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர் மற்றும் ஆங்கில ஆசிரியர் சகாய வில்சன் ஆகியோரை, தலைமையாசிரியர் சாகுல் அமீது மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை