உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்று வழங்க ஏற்பாடு

வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்று வழங்க ஏற்பாடு

கரூர், நவ. 9-வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் வழங்கலாம் என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் துறையுடன் இணைந்து கடந்த, 1 முதல், 30 வரை டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, டிஜிட்டல் முறையில் முக அங்கீகாரம் மற்றும் கைரேகை பதிவு மூலம் தொலைதுார ஊர்களில் உள்ள ஓய்வூதியர்கள் இந்த வசதியை பெற முடியும்.ஓய்வூதியர்கள் சிரமம் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே தபால்காரர் மூலமாகவும், அஞ்சலகங்கள் மூலமாகவும் உயிர்வாழ் சான்று அளிக்கலாம். மேலும், https//ccc.cept.gov.in/ServiceRequest/request. மூலம் அல்லது Postinfo செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இதனால், ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத்திற்கோ, வங்கிக்கோ சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது.உயிர்வாழ் சான்றிதழ் அளித்ததும், ஓய்வூதியர்கள் வழங்கிய மொபைல் எண்ணுக்கு, ஓய்வூதிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட குறுந்தகவல் அனுப்பப்படும். அதற்காக கட்டணமாக, 70 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த சேவைக்காக அனைத்து அஞ்சலகங்களிலும் கடந்த, 1 முதல் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை, அனைத்து ஓய்வூதியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ