உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கலைஞர் கைவினை திட்டம் ; இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

கலைஞர் கைவினை திட்டம் ; இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவ-னங்கள் துறை சார்பில், கைவினை கலைஞர்-களை ஊக்குவிக்கும் வகையில், கலைஞர் கைவினை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக, 50 ஆயிரம் ரூபாய்- வரை, 25 சதவீதம் மானியத்துடன், மூன்று லட்சம் ரூபாய்- வரை வங்கி கடன், 5 சதவீத வட்டி மானி-யமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்-பிக்க, 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். கைவினைத் தொழில் மற்றும் கைவினைக் கலைகளில் ஈடுபட்டு வரும் மக்கள் பயனடையும் வகையில், புதிய தொழில் தொடங்-கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்தி-டவும் கடனுதவி வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்-கலாம். மேலும் விபரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 69/10 சத்-யமூர்த்தி நகர் , தான்தோன்றிமலை, கரூர் -639007 அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்-வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை