உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு; அமலுக்கு வந்த நடத்தை விதிகள்

சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு; அமலுக்கு வந்த நடத்தை விதிகள்

கரூர்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், கரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சியின் விளம்பர பிளக்ஸ் பேனர்கள், சுவரொட்டிகளை, மாநகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23ல் நடக்கும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து கரூர் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்து முதல்வர் ஸ்டாலின் படம் இருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. பஸ் ஸ்டாண்ட், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் போன்ற பகுதிகளில் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகை, சுவரொட்டிகள் அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.இதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளில் அரசியல் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன. மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தொடங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி